தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் வராமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மாணவ மாணவிகளுக்கு மதிவண்டிகளை வழங்கினார். பின்னர் மாணவர்களிடையே பேசிய அவர், உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கம் மூலம் நோயைத் தடுக்கலாம் எனக் கூறினார்.