சீனாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் பரவியது கொரோனா வைரஸ்

சீனாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது அமெரிக்க மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 9 பேர் பலியாகியுள்ள நிலையில் தற்போது இந்த வைரஸ் அமெரிக்காவிலும் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்க சீன அதிபர் உத்தவிட்டுள்ள நிலையில் யுஹானிலிருந்து வாஷிங்டன்னுக்கு வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஆளானவர் எவரெட் பகுதியிலுள்ள மருத்துவமனையில் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த வைரஸ் எளிதில் பரவக்கூடியவை என்பதால் அமெரிக்காவில் வேறு யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா மற்றும் தைவான் நாடுகளில் தலா ஒருவரும், தாய்லாந்தில் 3 பேரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாகுத்தலால் 4 நாடுகளில் 280 பேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் ஏற்படாத வண்ணம் இருக்க சீனாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version