இனிமே தொலஞ்சு போனா.. Tatoo-வ வச்சு கண்டுபிடிச்சிருவாங்க! எங்கேனு தெரிஞ்சுக்கணுமா?

பச்சை குத்துதலின் வரலாறு:

பச்சைக் குத்துதல் அதாவது டாட்டூ (tattoo) என்று அழைக்கப்படும் முறையானது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நமது தாத்தா பாட்டி காலங்களில் நாம் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. அவர்களின் கைகளிலும், கால்களிலும் பச்சை நிறத்தில் கோலங்கள்  மற்றும் அவர்களுடைய பெயர்களும் வரையப்பட்டு இருக்கும். அதன் பின்னர் நமது அம்மா காலங்களில் கைகளில் கோலம் போடும் முறையானது இல்லாமல் போயிருக்கும்.  ஆனால் இன்றைய காலக்கட்டங்களில் டாட்டூ சென்டர்கள் இல்லாத தெருக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு வீதிகளிலும் நிறைந்து வழிகின்றன. இப்பொது நவீன நாகரிகம், மற்றும் அழகிற்காக போடப்படும் இந்த டாட்டூகளின் வயது சுமார் 5000 ஆண்டுகளுக்கு பழமையானது என்று கூறப்படுகின்றன.

இந்த பச்சைக் குத்தப்படும் முறையனாது புதிய கற்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறையானது ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளின் கற்காலங்களில்  இருந்து வருவதாக கூறப்படுகின்றது. நாம் இன்று அழகிற்காக போடப்படும் டாட்டூகள் அன்றைய எகிப்திய காலங்களில் வலி நிவாரணியாக பயன்படுத்தினார்கள் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?. அதாவது அன்றைய எகிப்திய காலக்கட்டத்தில் பிரசவத்தின் போது பெண்களுக்கு அவர்களின் வயிறு, தொடைப்பகுதிகள், மற்றும் மார்பு பகுதிகளில்  இத்தகைய டாட்டூக்கள் போடப்பட்டதாக  கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உலகில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட  ஆராய்ச்சிகளின் மூலம் சடலமாக மீட்கப்பட்டவர்களின் கை, கால் மற்றும் உடல்களின் இதரப் பகுதிகளில் டாட்டூகள் பதிந்து இருப்பதாக கூறுகின்றனர்.  இதனைத் தொடர்ந்து கி.பி. 1700-ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற  போர்களில் மக்கள் இடம்பெயர்ந்ததால் இந்த டாட்டூ கலாச்சாரம் என்பது பரவி இருக்கு என்று சொல்லப்படுகின்றன.  இந்த டாட்டூக்கள் நிறைய வகையில் பயனுள்ளதாக தற்போது உள்ள கால சூழ்நிலையில் மாறிவருகின்றன. ஏனென்றால் சீன நாட்டில், தொலைந்துபோகும் முதியவர்களை கண்டுபிடிக்க இந்த டாட்டூ முறையானது பயன்படுத்தப்படுகின்றது.

உதவும் டாட்டூ முறை:

சீன நாட்டின் அழகு நிலையம் ஒன்றில் அல்சீமர் எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள் அடிக்கடி தொலைந்து போகின்றனர்.  இப்படி தொலைந்து போனவர்களை எளிதில் கண்டறிய உதவியாக அவர்களின்  கைகளில் முகவரி, தொலைபேசி எண் மற்றும் பெயர்கள் உள்ளிட்ட  விவரங்களை இலவசமாக பச்சை குத்தித் தரப்படுகிறது.  இந்த செயலானது அனைவரின்மத்தியிலும் பெரும் கவனத்தை  பெற்று உள்ளது. தற்போது சீன நாட்டிலேயே இந்த செய்திதான் ட்ரெண்டிங் நம்பர் ஒன். மனதில் ஏற்படும் வலிகளைவிட, பச்சைக் குத்தும் வலி ஒன்றும் பெரிதாக இருக்காது என்று சீன நாட்டு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Exit mobile version