மண்டலவாரியாக சென்னையின் கொரோனா நிலவரம்!!

சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 79 சதவீதம் பேரும், தண்டையார்பேட்டையில் 77 சதவீதம் பேரும், தேனாம்பேட்டையில் 72 சதவீதம் பேரும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதேபோல் வளசரவாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 69 சதவீதம் பேரும் குணமடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி பகுதிகளில் 49 ஆயிரத்து 587 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 21 ஆயிரத்து 766 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version