பாகிஸ்தான் பகுதிக்கு, மிக் 21 ரக இந்திய விமானப்படை விமானத்தில் சென்ற விங் கமாண்டர் அபிநந்தனை, பாக் ராணுவத்தினர் சிறைபிடித்து வைத்துள்ளனர். அவரின் நிலை குறித்து பதற்றம் ஏற்பட்ட நிலையில், அவர் தேனீர் அருந்திக் கொண்டே, பாகிஸ்தான் ராணுவ மேஜரிடம் பேசும் வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. அந்த உரையாடலை தற்போது காணலாம்.
பாக். மேஜருடன் விங் கமாண்டர் அபிநந்தன் உரையாடல்
பாக். மேஜர்: உங்கள் பெயர் என்ன
அபிநந்தன்: விங் கமாண்டர் அபிநந்தன்
பாக். மேஜர்: இங்கு நல்ல முறையில் நடத்தப்படுகிறீர்கள் என்று நம்புகிறோம்
அபிநந்தன்: ஆம். இதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். என்னுடைய நாட்டிற்கு சென்ற பிறகும், இதை மாற்றி கூற மாட்டேன். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் என்னை நல்ல முறையில் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் மிகவும் நாகரிகமானவர்கள். ஒரு குழு மற்றும் ராணுவ வீரர்களிடமிருந்து என்னை காப்பாற்றிய கேப்டனில் தொடங்கி, அதன்பின் நான் கூட்டிச்செல்லப்பட்ட அதிகாரிகளும் நாகரிகமானவர்கள். இதேபோலதான் எங்களுடைய ராணுவத்தினரும் நடந்துகொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த செயல் என்னை மிகவும் கவர்ந்துள்ளது.
பாக். மேஜர்: நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியைச் சேர்ந்தவர்?
அபிநந்தன்: நான் அதை சொல்லலாமா என்று தெரியவில்லை. மன்னிக்கவும் மேஜர், நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன்
பாக். மேஜர்: சரி.. நீங்கள் திருமணமானவரா ?
அபிநந்தன்: ஆம்
பாக். மேஜர்: டீ பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்…
அபிநந்தன்: டீ அற்புதமாக உள்ளது. நன்றி.
பாக். மேஜர்: நீங்கள் எந்த விமானத்தை ஓட்டி வந்தீர்கள் ?
அபிநந்தன்: மன்னிக்க வேண்டும் மேஜர். அதை நான் கூற முடியாது. ஆனால், விமானத்தின் உடைந்த பாகங்களை வைத்து நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
பாக். மேஜர்: நீங்கள் என்ன குறிக்கோளோடு வந்தீர்கள் ?
அபிநந்தன்: மன்னிக்கவும். அதை நான் உங்களிடம் கூறக் கூடாது.
பாக். மேஜர்: சரி.. நன்றி..