டெல்லியில் பனிப்பொழிவு கடுமையாக அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து சாலையோரங்களில் வசித்து வருபவர்கள் இரவு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
டெல்லியில் சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. மக்கள் அதிகாலை வேலைகளில் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை காணப்படுகிறது.
அதிகாலை நேரத்தில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன. ஸ்வெட்டர் உள்ளிட்ட குளிர்கால உடைகளின் விற்பனையும் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் வீடற்று சாலைகளில் வசித்து வருபவர்கள், குளிரை தாங்க முடியாமல், இரவு நேரங்களில் அரசு முகாம்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். அவர்களின் தேவைகளின் பூர்த்தி செய்ய மாநில அரசு ஆவன செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.