முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘ தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்திற்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர் சஞ்சயா பாரு எழுதிய புத்தகத்தை அடிப்படையாக கொண்டு, ‘ தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஜனவரி 11ம் தேதி ரிலீசாக உள்ளநிலையில் சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு மன்மோகன் சிங் தான் காரணம் என்பதுபோல் படத்தில் காட்டப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. மேலும் படக்குழுவினர் தங்களின் கோரிக்கையை ஏற்று சில மாற்றங்களை செய்தால் மட்டுமே நாடு முழுவதும் படத்தை வெளியிட அனுமதிக்க போவதாக இளைஞர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.