மத்திய பிரதேசத்தில் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் முன்னிலை

5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலில் ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் இரு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ஐந்து மாநிலங்களின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பிற்பகலுக்குள் 5 மாநிலங்களில் ஆட்சியமைக்கப் போகும் கட்சிகள் குறித்த இறுதி நிலவரம் தெரியவரும்.

தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணி 2வது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது அக்கட்சி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. மத்திய பிரதேசத்தில் இரு கட்சிகள் இடையே தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

சட்டீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் பாஜக தொடர்ந்து இரண்டாவது இடத்திலேயே உள்ளது.

மிசோரமில் மாநில கட்சியான மிசோரம் தேசிய முன்னணி கட்சி அதிக இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 2வது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருவதையொட்டி, அந்த மாநிலங்களின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பகிர்ந்தும் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Exit mobile version