மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை அப்போதையை காங்கிரஸ் அரசு நிராகரித்து விட்டதாக இந்திய விமானப்படையின் முன்னாள் தலைமை தளபதி பி.எஸ்.தனோவா தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பேசிய பி.எஸ்.தனோவா, 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, பாகிஸ்தான் மீது போர் விமானங்கள் தாக்குதல் நடத்த அரசுக்கு விமானப் படை பரிந்துரைத்ததாக தெரிவித்தார். அதேபோல், 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த அரசுக்கு பரிந்துரைத்ததாகவும், ஆனால் தாக்குதல் திட்டத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு நிராகரித்து விட்டதாக பி.எஸ்.தனோவா கூறினார். கடந்த 2008ஆம் ஆண்டு, கடல் வழியாக மும்பை நகருக்குள் நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். அப்போது விமானப்படை அளித்த தாக்குதல் திட்டத்தை காங்கிரஸ் அரசு நிராகரித்ததாக விமானப்படையின் முன்னாள் தலைமை தளபதி பி.எஸ்.தனோவா கூறியுள்ளது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.