கடந்த 4 ஆண்டுகளில், 90 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 7-ம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி, அங்கு நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைத்தவுடன் ஊழல் மற்றும் கறுப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டதாக கூறினார்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் ஊழலைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி பிரதமர் மோடி, பாஜக ஆட்சியில் ஊழல்வாதிகளிடம் இருந்து 90 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.