காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஆபத்தானது மற்றும் நிறைவேற்ற முடியாதது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். நீட் தேர்வு ரத்து, நியாய் திட்டம், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நிறைவேற்ற முடியாத அம்சங்கள் இருப்பதாக தெரிவித்தார். நிறைவேற்றக்கூடியதாக அக்கட்சி தெரிவித்துள்ள வாக்குறுதிகள் நாட்டின் நலனுக்கு ஆபத்தானவை என்று கூடிய அருண் ஜேட்லி, காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை நீர்த்து போக செய்ய காங்கிரஸ் முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.
இந்தியாவை உடைப்பதே அக்கட்சியின் எண்ணம் என்று கடுமையாக சாடிய அருண் ஜேட்லி, தகுதியற்றவர்கள் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளதாக கூறினார்.