தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
ஹெல்மெட் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்தக் கோரி சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் ஹெல்மட் அணிவது கட்டாயமாக்கப்பட்டதால் சமீப காலமாக உயிரிழப்புகள் குறைந்துள்ளன என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் ஹெல்மெட் சட்டம் கடுமையாக பின்பற்றப்படுவது போன்று ஏன் தமிழகத்தில் செய்ய முடியவில்லை என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்கும் சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தனர். கட்டாய ஹெல்மட் சட்டம் தமிழகத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர்கள் கூறினர்.