மாற்று வரி மற்றும் டிவிடெண்ட் விநியோக வரியால் நிறுவனங்கள் பின்வாங்கியதை அடுத்து சிறப்பு பொருளாதார மண்டல கொள்கையை மறுஆய்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சென்ற நிதியாண்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் 5 கோடியே 52 லட்சம் ரூபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளன. இது 15 சதவீத வளர்ச்சியாகும். இது வரும் ஆண்டிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு கடந்த 2010 -11 ஆம் நிதியாண்டில் மத்திய அரசு குறைந்தபட்ச மாற்று வரி மற்றும் டிவிடெண்ட் விநியோக வரி விதித்தது. இதனால் சில நிறுவனங்கள் இப்பிரிவில் இருந்து பின் வாங்கின.
சில நிறுவனங்கள் தமது திட்டங்களை சரண்டர் செய்ய அனுமதி கோரி உள்ளன. இந்நிலையில் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான ஊக்குவிப்பு சலுகைகளை பொறுத்தவரை கொள்கையை மறுஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதிய கொள்கையில் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிப்பது, உற்பத்தியை ஊக்குவிப்பது மற்றும் ஏற்றுமதிக்கு பதிலாக வேலைவாய்ப்பில் அதிக கவனம் செலுத்துவது போன்ற அம்சங்கள் இடம் பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.