தமிழகத்திற்கு நிதி வழங்காமல் இழுத்தடித்து வரும் மத்திய அரசுக்கு கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்

புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிதி வழங்காமல் இழுத்தடித்து வரும் மத்திய அரசுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நாகையில் நடைபெற்றது. கூட்டத்தில் புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்காமல் தமிழக விவசாயிகளை ஏமாற்றிவரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாய தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நுண்கடன் நிறுவனங்கள் அடாவடித்தனமாக வசூல் வேட்டை நடத்துவதாக குற்றம்சாட்டினார்.

இதனை கண்டித்து, வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தபோவதாகவும் அவர் அறிவித்தார்.

Exit mobile version