கொரோனாவுக்கு என அமைக்கப்பட்ட தனி சிறப்பு முகாம் – ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் கள்ளிக்குடியில் கொரோனாவுக்கென அமைக்கப்பட்டுள்ள தனி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திருச்சியில் சிகிச்சை பெற்று வரும் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தனி மையத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்கள் 48 மணி நேர கண்காணிப்பிற்கு பிறகு அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version