வசூல் “கிங்” விஸ்வாசம்

தமிழகத்தில் அஜித் நடித்து பொங்கல் அன்று வெளிவந்த விஸ்வாசம் படம் 180 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அஜித் நடித்த படங்களிலே 180 கோடியை வசூல் செய்த முதல் படம் விஸ்வாசம் தான் என்பது குறிப்பிடதக்கது. பொங்கலுக்கு ரஜினி நடித்த பேட்ட படமும் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் ஒரே நாளில் திரையரங்கில் வெளியிடப்பட்டது.ஆனால், ரஜினிபடத்தை பின்னுக்கு தள்ளி அஜித் படம் வசூல் சாதனை படைத்துள்ளது .

180 கோடியை தாண்டி வசூல் செய்த படங்களின் வரிசையில் பாகுபலி-2 திரைப்படம் முதல் இடத்திலும், ரஜினி நடித்த 2.0 திரைப்படம் 2ம் இடத்திலும், மற்றும் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் 3ம் இடத்தையும் பிடித்திருந்தது. தற்போது விஸ்வாசம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது .

இந்த வெற்றியை தொடர்ந்து விஸ்வாசம் திரைப்படம் கன்னடா மொழியில் மொழிபெயர்க்க உள்ளது .

Exit mobile version