திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளை மூட வேண்டும்-தமிழிசை சவுந்தரராஜன்

உலக கவனத்தை ஈர்த்த 2ஜி ஊழல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதால், அதன் முடிவை பார்த்து, தவறானவருக்கு வாக்களித்து விட்டோமோ என்று மக்கள் ஆதங்கப்படுவார்கள் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில், தமிழிசை சவுந்தரராஜன், தனது 58வது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், கோவில்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை மூட தூத்துக்குடி எம்.பி. யாக உள்ள கனிமொழி மாவட்ட ஆட்சி தலைவரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாக தகவல் கிடைத்ததாகவும், முதலில் திமுகவினர் நடத்து சாராய ஆலைகளை மூட வேண்டும் என்று கூறினார். மேலும், உலக கவனத்தை ஈர்த்த 2ஜி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதால், தவறானவர்களுக்கு வாக்களித்துவிட்டோமோ என்று மக்கள் ஆதங்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version