தேர்தல் என்னும் திருவிழா காலத்தில் பலூன் விற்பவர்களும், சர்க்கஸ்காரர்களும் வருவார்கள், ஆனால் திருவிழா முடிந்தவுடன் காணாமல் போய் விடுவார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓய்வு பெறும் நேரத்தில் பொதுவாழ்வில் ஈடுபட வருபவர்களையும், சினிமாவில் நடிக்க வாய்ப்பில்லாமல் தற்போது மக்களுக்கு கால்ஷீட்டை வழங்குகிறேன் என கூறுபவர்களையும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என குறிப்பிட்டார்.
மேலும், திருவிழா காலம் போன்ற தேர்தல் நேரத்தில், பலூன் விற்பவர்கள், சர்க்கஸ்காரர்கள், பொம்மை விற்பவர்கள் என பலரும் வருவார்கள், ஆனால், திருவிழா முடிந்தவுடன் காணாமல் போய் விடுவார்கள் எனவும் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், திருவிழாவிற்கு வரும் மக்கள் சாமியை பார்க்க வருவார்கள், அந்த சாமி எடப்பாடி பழனிசாமி தான் என பெருமிதம் தெரிவித்தார்.