மின்கணக்கீட்டாளர் பணிக்கான தேர்வை தமிழில் எழுதலாம் -அமைச்சர் தங்கமணி

மின்கணக்கீட்டாளர் பணிக்கான தேர்வை தமிழில் எழுத அனுமதி பெற்றுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

திருப்பூரில், மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு 10 ஆயிரத்து 72 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின்கணக்கீட்டாளர் பணிக்கான தேர்வை மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனம் நடத்துவதால் ஆங்கிலத்தில் அறிவிக்கப்பட்டதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசி தமிழில் தேர்வெழுத அனுமதி பெற்றுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

Exit mobile version