நடுவானில் தூங்கிய சீன விமானி…

வேலை பார்க்கும் போது தூங்கும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு… அப்படி இருக்க சீன விமானி ஒருவர் நடுவானில் தூங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனா போயிங் 747 விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தை இரண்டு விமானிகள் இயக்கி வந்தனர். இந்நிலையில், திடீரென பைலட்டிடம் இருந்து எந்த சிக்னலும் வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த மற்றோரு விமானி, அவரை உற்று பார்த்தார்.

அப்போது தான் தெரிந்தது அந்த விமானி ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார் என்று. இதனை அடுத்து சக விமானி அவரை தனது செல்போனில் வீடியோ பிடித்தார்.

விமானியின் இந்த செயலை நிர்வாகம் கடுமையாக கண்டித்தது. மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தூங்கிய அந்த விமானி 20 வருடம் அனுபவம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version