சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் பார்வைகளுக்கு திறக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வில் சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் முக்கிய இடங்களாக திகழும் கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகியவை மட்டும் பராமரிப்பு பணிகள் காரணமாக இரண்டு தினங்களாக திறக்கப்படாமல் இருந்தது.
பராமரிப்பு பணிகள் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் இந்த பூங்காக்கள் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.
கிண்டி சிறுவர் பூங்காவில் மான், பாம்பு , குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள், மக்கள் பார்வைக்கு மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டன.
முதல் நாளான இன்று மக்கள் வருகையின்றி கிண்டி சிறுவர் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.
வார இறுதி நாட்களில் மீண்டும் மக்களின் வருகை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதன் காரணமாக பூங்காவில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க வரும் பார்வையாளர்கள் கால்களை சுத்தப்படுத்தும் விதமாக கிருமிநாசினி திரவம் வைக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் முககவசம் அணிய வேண்டும், பாதுகாப்பான இடைவெளியை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஒலிப்பெருக்கி மூலம் பூங்கா ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.