புல்வமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். காஷ்மீர் மாநிலம், புல்வமா பகுதியில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 40 துணை ராணுவ படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த வீரர் சுப்ரமணியம் வீரமரணம் அடைந்தார். உயிரிழந்த சுப்ரமணியன் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக 20 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், சவலப்பேரியில் உள்ள சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். சுப்ரமணியனின் படத்திற்கு மலர் தூவி அவர் அஞ்சலி செலுத்தினார்.