திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பாமக நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமுத்து, நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தேன்மொழி ஆகியோரை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றிய ராமதாஸ், தமிழகத்தில் பட்டியல் இனங்களில் இடம்பெற்றுள்ள ஆறு பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக நிறைவேற்றுவார் என தெரிவித்துள்ளார்.