விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

2020 – 2021ஆம் கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 5 லட்சத்து 45 ஆயிரத்து 166 மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக, 9 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

 

நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சரோஜா, வளர்மதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version