முதலமைச்சரின் சுற்றுப்பயணம் டெல்டா மாவட்ட விவசாயிகளின் அச்சத்தைப் போக்கியுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த சின்ன கூத்தாநல்லூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் காமராஜ் நேரில் ஆய்வுசெய்தார். சேதமடைந்த வீடுகள், பயிர்களை ஆய்வுசெய்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்த அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவராண பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேளாண் நிலங்களில் சூழ்ந்துள்ள தண்ணீர் வடிந்த பிறகுதான், சேதங்களை முழுமையாக மதிப்பிட முடியும் என்றும், ஸ்டாலின் கூறுவதுபோல அவசர கோலத்தில் எதையும் செய்துவிட முடியாது என்றும் கூறினார். முதலமைச்சர் நேரடியாக பயிர்களை ஆய்வுசெய்து, ஆறுதல் கூறியது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.