தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் பார்வையற்ற விளையாட்டு வீராங்கனைக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் நிதி உதவியையும் வழங்கியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதலமைச்சரிடம் மனுக்கள் வழங்கினர். இந்த நிகழ்வின்போது எடப்பாடி, செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்த கண்பார்வையற்ற விளையாட்டு வீராங்கனை சுபாஷினிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை முதலமைச்சர் வழங்கினார். சுபாஷினி வரும் செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் பாரா ஜூடோ காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுக இந்தியா சார்பில் தேர்வாகி உள்ளார். காமன் வெல்த் போட்டியில் பங்கற்க தேவையான உதவிகளை செய்யுமாறு மாணவி சுபாஷினி கடந்த 21ஆம் தேதி சேலத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார். இந்நிலையில் இந்த கோரிக்கை ஏற்று மாணவிக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.