நாட்டின் 71-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்பின், அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.அதைத்தொடர்ந்து வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம் மற்றும் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறை சிறப்பு விருது ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
குடியரசு தின விருதுகள்:
வீர தீர செயலுக்கான அண்ணா விருது – தீயணைப்புப்படை ஓட்டுநர் ராஜாவுக்கு வழங்கப்பட்டது.
கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது – மு. சாஜ் முகமதுக்கு அளிக்கப்பட்டது
காந்தியடிகர் காவலர் பதக்கம் – திருப்பூர் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் பெற்றுக் கொண்டார்.
விருதினை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகளின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள், கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.