தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைகழகத்திற்கான புது கட்டடத்துக்கும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்துக்கான புது கட்டடத்துக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைகழகத்திற்கு, 14 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய கட்டடத்திற்கு, முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
அதே போல், சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்துக்கு, 2 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்திற்கும், முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.