தமிழ்நாட்டில் 8 புதிய நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாட்டில் இரண்டாயிரத்து 368 கோடி ரூபாய் மதிப்பில் 8 புதிய நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 தொழில் திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலமாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில்1,500 கோடி ரூபாய் மதிப்பில் 23 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இன்டர்நேஷனல் டெக் பார்க் தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டத்துக்கும், கடலூர் சிப்காட் தொழிற்பூங்காவில் 350 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சிலிக்கா உற்பத்தி திட்டத்துக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 105 கோடி ரூபாய் முதலீட்டில் 160 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் Nissei எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்துக்கும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஜப்பானின் உசுய் சுசீரா நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், செங்கல்பட்டில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் DINEX நிறுவனத்தின் எக்சாஸ்ட் (EXHAUST) உற்பத்தி திட்டத்துக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 150 கோடி ரூபாய் முதலீட்டில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் STEEL SHOPPE நிறுவனத்தின் எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டத்துக்கும், கடலூர் மாவட்டத்தில் 47 கோடி ரூபாய் முதலீட்டில் 550 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் MRC MILLS நிறுவனத்தின் Textiles processing திட்டம் மற்றும் விழுப்புரம் கம்பூர் பகுதியில் 16 கோடி ரூபாய் முதலீட்டில் 160 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஸ்ரீராஜராஜேஸ்வரி லைஃப் கேர் நிறுவனத்தின் மருத்துவ பொருட்கள் உற்பத்தி திட்டத்துக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

Exit mobile version