இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள முதலமைச்சர் இன்று லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா செல்கிறார்

கடந்த 3 நாட்களாக லண்டனின் பல்வேறு தொழில் நிறுவனங்களைப் பார்வையிட்ட முதலமைச்சர் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் தமிழகத்தில் முதலீடு செய்ய இங்கிலாந்து தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு விமானம் மூலம் அமெரிக்காவின் நியூயார்க் செல்கிறார். அங்கு தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வலைதளத்தையும் முதலமைச்சர் துவங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர் தொழில் முதலீட்டாளர்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுப்பதுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ள உள்ளார்.

Exit mobile version