நாகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
துறைமுக நகரமான நாகையில், அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, ஒரத்தூர் பகுதியில் 365 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி கட்ட மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், மருத்துவ கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற உள்ளது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மருத்துவ கல்லூரிக்கான உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து முடிவடைந்த திட்டப் பணிகளை மக்களுக்கு அர்பணித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்குகிறார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் காலந்து கொள்கின்றனர்.