அரசு பொருட்காட்சியை முதலமைச்சர் திறந்து வைத்தார்

சேலத்தில் அரசு பொருட்காட்சியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள மாநகராட்சி மைதானத்தில், நடைபெற்று வரும் பொருட்காட்சியில், தமிழக அரசின் பல்வேறு சாதனைகள் குறித்த விளக்கப் படங்கள் கொண்ட, அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதையடுத்து பல்வேறு துறைகளின் சார்பில் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 19 திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

விழாவில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர், தமிழக அரசின் நலத்திட்டங்களை கண்காட்சி மூலம் பொதுமக்கள் முழுமையாக தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார். மக்களுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தவதே அரசின் குறிக்கோள் என்று அவர் தெரிவித்தார்.

சேலம் அரசு பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்குகளை முதலமைச்சர் பார்வையிட்டார். அரசின் சாதனைகளை விளக்கும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்

Exit mobile version