அதிகாரிகளை மக்கள் தேடி சென்ற நிலை மாறி, மக்களை அதிகாரிகள் தேடிச் செல்லும் நிலை அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் தமிழக அரசின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களின் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு தமிழக அரசு அதிகளவில் முன்னுரிமை அளித்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு திட்டமாக இந்த திட்டம் திகழும் என்றும் முதலமைச்சர் கூறினார்.