கோவை, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில், புதிதாக கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் பதிவுத்துறை அலுவலகங்களுக்கு பதிலாக சொந்த கட்டடங்கள் கட்டும் திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் மதுக்கரையில் 1 கோடியே 65 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்தக் கட்டிடத்தில், பொதுமக்களுக்கான காத்திருப்பு அறை, மாற்றுத்திறனாளிக்களுக்கான சாய்தள நடைபாதை, குடிநீர் மற்றும் கழிவறை போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.