மதராசபட்டினம் விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

சென்னையில் 3 நாட்கள் நடைபெறும் பாரம்பரிய உணவுத் திருவிழாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

சென்னை தீவுத்திடலில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு மதராசபட்டினம் விருந்து என்ற பெயரில் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்றைய காலகட்டத்தில் உணவு என்பது ஆடம்பர பொருளாக மாறிவிட்டது என்றார். ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதுடன் உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version