பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு பொங்கல் பரிசு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். 1 கோடியே 98 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. 2 கோடியே 2 ஆயிரத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோவும், கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வரும் 7ஆம் தேதி முதல் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.