தமிழ்நாட்டில் ரூ.3,185 கோடி மதிப்பில் 11 திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 185 கோடி ரூபாய் முதலீட்டில், ஆறாயிரத்து 955 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், 11 திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காஞ்சிபுரத்தில் 730 கோடி ரூபாய் முதலீட்டில் 875 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், TPI Composites நிறுவனத்தின் Wind blades உற்பத்தி திட்டம், காஞ்சிபுரத்தில் 608 கோடி ரூபாய் முதலீட்டில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் GLOVIS HYUNDAI நிறுவனத்தின் வாகன உதிரி பாகங்கள் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் Sojitz Motherson நிறுவனத்தின் தொழிற்பூங்கா திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 350 கோடி ரூபாய் முதலீட்டில் 625 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ராஜபாளையம் மில்ஸ் நிறுவனத்தின் Textiles fabrics உற்பத்தி திட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் 220 கோடியில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் Gulf Oil நிறுவனத்தின், Oil Lubricants திட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 கோடி ரூபாய் முதலீட்டில் 100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் JMatadee (மட்டாடி) நிறுவனத்தின் கிடங்கு திட்டம்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் 75 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் Hibrow Health care நிறுவனத்தின் மருத்துவ பொருட்கள் உற்பத்தி திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரி தொழில்நுட்ப பூங்காவில் 24 கோடி ரூபாய் முதலீட்டில் 330 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப சேவைகள் திட்டம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 451 கோடி ரூபாய் முதலீட்டில் ஆயிரத்து 150 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் Mothi Spinners, Lucky Yarn Tex மற்றும் Lukcy Weavess நிறுவனங்களின் நூல்கள் மற்றும் ஆடைகள் உற்பத்தி திட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் 75 நபருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக Mahindra steel services நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைகளுக்கான எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 47 கோடி ரூபாய் முதலீட்டில் 950 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் Teemage Builders நிறுவனத்தின் கட்டுமான பொருட்கள் உற்பத்தி திட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Exit mobile version