திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறக்கூடிய அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை குடும்பத்தினருடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சுவாமி தரிசனத்திற்கு பிறகு ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்கள் முதலமைச்சர் பழனிசாமிக்கு வழங்கப்பட்டு, வேதபண்டிதர்கள் மூலமாக வேத ஆசிர்வாதம் செய்யப்பட்டது. பின்னர் கோயிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி முதலமைச்சர் வழிபட்டார். இதையடுத்து பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் முதலமைச்சர் பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை புறப்பட்டு சென்றார்.

Exit mobile version