காவிரி டெல்டா பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு, நெடுவாசல் போராட்டக் குழுவினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், புதுக்கோட்டை நெடுவாசல் போராட்டக் குழுவை சேர்ந்த வேலு தலைமையில் 5 கிராம மக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். சென்னை பசுமை வழிசாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, காவிரி டெல்டா பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெடுவாசல், போராட்டக் குழுவினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
இதற்கிடையில் நெடுவாசல் மட்டுமின்றி, எந்த கிராமமும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில், முதலமைச்சர் எடுத்த முடிவு, விவசாயிகளுக்கு மட்டுமின்றி, அடுத்த தலைமுறையினருக்கும் பால் வார்க்கும் செய்தியாக அமைந்துள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.