கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கோடை காலம் தொடங்க இருக்கும் நிலையில், வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே, வரும் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தின் குடிநீர் நிலவரம் குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.