பொதுமக்களை வெகுவாக கவர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பரங்கள் ஒட்டப்பட்ட ரயில் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு, மகளிர் சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 6 முறை சென்று வரும் இந்த ரயிலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களின் புகைப்படம் அடங்கிய விளம்பரங்கள் இருபுறங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. இது ரயில் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மூன்று மாதகால விளம்பர ஒப்பந்தம் அடிப்படையில், இந்த விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. சாதாரணமாக இயங்கும் ரயிலில், இது போன்ற விளம்பரங்கள் செய்வதன் மூலம், மத்திய அரசிற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version