நாகை மாவட்டம் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் தேர் பவனி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
வேளாங்கண்ணி மாதா திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதா பெரிய தேர் பவனி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தேர் பவனியையொட்டி, பேராலயத்தில் சிறப்பு கூட்டுபாடலுடன் திருப்பலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து மாலை பேராலய முகப்பில் இருந்து உத்திரியமாதா, அந்தோணியார் உட்பட சிறிய தேர்கள் முன்னே வர அதற்குப்பின்னால் பெரிய சப்பரத்தில் புனித ஆரோக்கிய மாதா அன்னையின் தேரினை பக்தர்கள் சுமந்து வந்தனர். வண்ணமயமான வாணவேடிக்கையுடன் நடைபெற்ற தேர்பவனியை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இன்று மாலை கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.