அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழக மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் எனவும், இயல்பை விட 4 முதல் 6 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்பச் சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவ காற்றின் காரணமாகவும் பலவேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை முதல் மேலும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.