சென்னையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

வட மற்றும் தென் தமிழகத்திலும், சென்னையிலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்றும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் 6 சென்டிமீட்டர் மழையும், கோத்தகிரி, சேலம் பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version