கூந்தன்குளத்தில் 2வது நாளாக நடைபெறும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் கடந்த இரண்டு நாட்களாக பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 129 ஹெக்டர் கொண்ட கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு, ரஷ்யா, ஆஸ்திரேலியா, சைபீரியா, நைஜீரியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. கூழைக்கடா, செங்கால் நாரை, சாம்பல் நாரை, கோணமூக்கு நாரை, நத்தை குத்தி, வெள்ளை அரிவாள் மூக்கன், டால்மிஷன், ஃபெலிகன் வகை பறவைகள் உள்ளிட்ட பறவைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Exit mobile version