சிவராத்திரி தினத்தையொட்டி காளைகள் விடும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் நவாப்பாளையம் கிராமத்தில் 20-ஆம் ஆண்டாக காளைகள் விடும் விழா நடைபெற்றது.

சிவராத்திரி தினத்தையொட்டி நடந்த காளைகள்விடும் விழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதில் மிகவிரைவாக எல்லைக்கோட்டை அடைந்த காளைகளுக்குப்பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கண்டுரசித்தனர்.

Exit mobile version