நாகையில் மத்திய குழுவினர் ஆய்வு

கஜா புயல் பாதித்த நாகை மாவட்டத்தில் மத்திய குழுவினர் 3-வது மற்றும் இறுதிகட்ட ஆய்வை துவங்கியுள்ளனர்.

தமிழகத்தை தாக்கிய கஜா புயல், டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேதம் குறித்த விவரங்களை அளித்து சேதமதிப்பை ஆய்வை செய்ய மத்திய குழுவினரை உடனடியாக தமிழகத்திற்கு அனுப்ப கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து கடந்த 24-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் தங்களது ஆய்வை துவங்கிய மத்திய குழுவினர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வை மேற்கொண்டனர்.

தொடர்ந்து 3-வது மற்றும் இறுதி கட்ட ஆய்வை மத்திய குழுவினர் இன்று நாகையில் துவங்கியுள்ளனர். முதலாவதாக, வேட்டைக்காரன் இருப்பில் புயல் சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். மத்திய குழுவினருடன் தமிழக அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார் மற்றும் தங்கமணி உடனிருந்தனர்.

 

Exit mobile version