மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதாவை இன்று தாக்கல் செய்ய மத்திய அரசு முனைப்பு

மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்லாமியர்களிடம் வழக்கத்தில் உள்ள முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் மசோதாவை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரத்தில் மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு போதிய பலம் இல்லாத நிலையில், எதிர்கட்சிகள் அல்லாத எம்.பி.க்களின் ஆதரவை எதிர்நோக்கியுள்ளது. ஆனால், முத்தலாக் தடை மசோதாவில் திருத்தங்கள் செய்ய எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக எதிர்கட்சிகள் இந்த மசோதாவை நிறைவேறவிடாமல் முழக்கங்களை எழுப்பி வருகின்றன. இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று முத்தலாக் தடை மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

Exit mobile version