பாலாறு – கோதாவரி ஆறுகளை இணைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற சக்தி சம்மேளம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வேலூர் வந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலாறு – கோதாவரி ஆறுகளை இணைக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக கூறினார். தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் அல்லாத கூட்டணியை பாஜக அமைக்கும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தமிழகத்தை சிறப்பாக வழிநடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.