தமிழர்களை மீட்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது!!

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

பல்வேறு வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஜூன் 6 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை101 விமானங்கள் இயக்கப்பட்டதாக தெரிவித்தார். கடந்த 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார். ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ள 792 விமானங்களில், 127 விமானங்கள் தமிழகத்துக்கு இயக்க உள்ளதாகவும் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார். விவரங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் விமான இயக்கங்களை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

Exit mobile version